தெருநாய் துரத்தியதால் விபரீதம் சுவரில் மோதி வாகன ஓட்டி பலி
அதானி: கர்நாடகாவில் தெருநாய் துரத்தியதால், பைக்கில் சென்ற நபர் பயத்தில் கட்டுப்பாட்டை இழந்து சு வ ரில் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படு த்தியுள்ளது.
கர் நாடகாவின் பெலகாவி மாவட்டம், அதானி நகரைச் சேர்ந்தவர் விஸ்வநாத் ஷரோல், 44-. இவருக்கு, மனைவி மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இவர், கடந்த 15ம் தேதி கும்பாரகல்லி பகுதியில், தன் இரு சக்கர வாகனத்தில் வந் து கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த வீட்டு சுவற்றில் மோதி விபத்தில் சிக்கியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த விஸ்வநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வாகன விபத்து என வழக்கு பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நி லையில், இந்த விபத்து தெரு நாயால் ஏற்பட்டது தெரியவந்துள்ளது. விபத்து நடந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட் சிகளை ஆய்வு செய்த போது, நாய் ஒன்று விஸ்வநாத்தை துரத்தியதும், இதனால் ஏற்பட்ட பயத்தில் வாகனம் ஓட்ட முடியாமல் சுவரில் மோதி அவர் உயிரி ழந்ததும் தெரியவந்தது .
இது குறித்து விஸ்வநாத் குடும்பத்தினர் கூறுகையில், 'சிறு வயதில் விஸ்வநாத்தை நாய் ஒன்று கடித்தது. அதிலிருந்து அவருக்கு நாய்களை கண்டாலே பயம். சம்பவம் நடந்த அன்றும், நாய் ஒன்று துரத்தியதால் ஏற்பட்ட பயம் காரணமாகவே விபத்து ஏற்பட்டது' என, தெரிவித்தனர்.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்