மஹாராஷ்டிராவின் 2,869 வார்டுகளில் 1,425ஐ கைப்பற்றியது பா.ஜ.,
மும்பை: மஹாராஷ்டிராவில், 29 மாநகராட்சிகளில் மொத்தமுள்ள, 2,869 வார்டுகளுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில், 1,425 வார்டுகளை கைப்பற்றி பா.ஜ., அமோக வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., சிவசேனா, தேசியவாத காங்., அடங்கிய, 'மஹாயுதி' கூட்டணி ஆட்சி நடக்கிறது.
நீண்ட கால பகை சமீபத்தில், ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், மாநகராட்சிக்கான தேர்தல் கடந்த 15ம் தேதி நடந்தது.
மும்பை, புனே, சத்ரபதி சம்பாஜிநகர், நவி மும்பை, வசைவிரார், கல்யாண் டோம்பிவிலி, கோலாப்பூர், நாக்பூர், சோலாபூர், அமராவதி, அகோலா, நாசிக், பிம்ப்ரி சின்ச்வாட், உல்லாஸ்நகர், தானே, சந்திரபூர், பர்பானி, மிராபயந்தர், நன்டெட் வாகலா, பன்வெல், பிவாண்டி நிஜாம்பூர், லத்துார், மாலேகான், சங்லி மிராஜ்குப்வாட், ஜல்காவ், அஹில்யாநகர், துலே, ஜல்னா மற்றும் இச்சல்கரன்ஜி ஆகிய 29 மாநகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.
மும்பை மாநகராட்சியை தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் உத்தவ் சிவசேனாவின் உத்தவ் தாக்கரேவும், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவின் ராஜ் தாக்கரேவும் நீண்ட கால பகையை மறந்து ஒன்றாக கைகோர்த்து போட்டியிட்டனர்.
துணை முதல்வர் அஜித் பவார், புனேவை மீண்டும் தேசியவாத காங்கிரஸ் கோட்டையாக மாற்றும் வகையில், சரத்பவாருடன் இணைந்து களம் கண்டார். துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவுடன் கைகோர்த்து பா.ஜ., களம் கண்டது. தேர்தல் முடிந்து ஓட்டுகள் எண்ணப்பட்டு நேற்று முன்தினம் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தன் வசம் மொத்தம் 29 மாநகராட்சிகளில் உள்ள 2,869 இடங்களில், 1,425 இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்றது. இதன் மூலம் தாக்கரே மற்றும் பவார்களின் மும்பை மற்றும் புனே கோட்டையை பா.ஜ., தன் வசமாக்கியுள்ளது.
ஆசியாவிலேயே பணக்கார மாநகராட்சியான மும்பையில் உள்ள 227 இடங்களில் பா.ஜ., மட்டும் 89 இடங்களில் வெற்றி பெற்று, உத்தவ் சிவசேனாவின் 28 ஆண்டுகால ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
பா.ஜ., கூட்டணியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, 29 இடங்களில் வெற்றி பெற்றது. உத்தவ் சிவசேனா 65, மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா 6 இடங்களை வென்றுள்ளன.
' வன்சித் பகுஜன் அகாடி' கூட்டணி அமைத்த காங்கிரஸ் 24, ஏ.ஐ.எம்.ஐ.எம்., 8, தேசியவாத காங்கிரஸ் 3, சமாஜ்வாதி 2 மற்றும் சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஒரு இடத்தையும் கைப்பற்றின.
நவி மும்பை மாநகராட்சியிலும் 69 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பா.ஜ., உருவெடுத்துள்ளது.
அதே போல் கல்யாண் டோம்பிவிலி 50, மிராபயந்தர் 78, நாசிக் 72, பன்வெல் 55, புனே 119, பிம்ப்ரி சின்ச்வாட் 84, சோலாபூர் 87, சத்ரபதி சம்பாஜிநகர் 57, நான்டெட் 45 மற்றும் நாக்பூரில் 102 இடங்களையும் பா.ஜ., வென்றுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவின் வெற்றிக்கு ஆளும்கட்சியின் அதிகாரபலம், பணபலம் என்றெல்லாம் அங்குள்ள எதிர்கட்சிகளை சேர்ந்த ஒவ்வொரு அறிவுஜீவியும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையான காரணம், 2019 ல் அங்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக எப்படி ஏமாற்றப்பட்டது என்பதுதான். பாஜகவும் சிவசேனாவும் மக்களிடமிருந்து அறுதிப் பெரும்பான்மை பெற்றனர். அதன் பிறகு உத்தவ் தாக்கரே கட்சி மாறி தனக்கு ஓட்டுப் போட்ட மக்களுக்கு துரோகம் செய்தார். பரம எதிரியான காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு புதிய அரசாங்கத்தை அமைத்தார். பாஜகவிற்கு எதிராக எல்லாப் பக்கங்களிலிருந்தும் சூழ்ச்சிகள் செய்யப்பட்டன. அதை மறக்காமல் மனதில் வைத்திருந்த மஹாராஷ்டிர மக்கள் துரோகியான உத்தவ் தாக்கரேயை இந்த தேர்தலில் தண்டித்து விட்டார்கள்.
இத்தகைய இமாலய வெற்றியை பிஜேபி தமிழகத்தில் சாதிக்கும் நாள் விரைவில் வரும் .திராவிட தீய சக்தியிடம் இருந்து தமிழகம் மீளும் .தமிழகத்தில் பட்டி தொட்டி எங்கும் தாமரை மலரும் மலரும் காலம் வரும் .Lotus flower will bloom in Tamilnadu
கட்டுமரத்தின் குலதெய்வம் பவாரின் கட்சி மாநகராட்சி தேர்தலில் ஒவைசி கட்சியை விட குறைந்த இடங்கள் தான் பெற்றுள்ளது ..மும்பையில் அஜித் பவார் 98 இடங்களில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் தான் வெற்றி
சிவசேனா என்ற ஒரு கட்சியை மட்டுமல்ல பலம் மிகுந்த என்சிபி ஐ க்கூட அமித்ஷா விட்டுவைக்கவில்லை. உடன்பிறப்புக்கள் வெறுத்தாலும் இதே நிலை தமிழகத்திலும் கூட வரலாம். திராவிட ஒழிப்பு தொகுப்பு இரண்டு சிறப்பாகவே நடப்பதாக சொல்லப்படுகிறது..
ரா கா இன்னும் எதற்கு மௌனம் ? ஈ வி எம் சரியா வேல செஞ்சதா?
மகாராஷ்டிரா தமிழகம் வெகு தூரத்திலில்லை. திமுக வினருக்கு இதுவொரு எச்சரிக்கை மணி. திமுக வினர் பகுத்தறிவு மதச் சார்பற்றக் கொள்கையென்ற நோக்கில் அதிகமான ஹிந்துக்களின் மனங்களை புண்படுத்தியுள்ளனர். மதங்கள் தோன்றுவதற்கு முன்னே தமிழர்கள் இந்த மண்ணில் தோன்றி விட்டனர். மிகப் பழமையான மொழி நம் தமிழ்மொழி என்பதை வரலாறு உணர்த்திக் கொண்டு வருகின்றது. சைவநெறிக் கொள்கை சங்க இலக்கிய குறிப்புக்கள் இதற்க்கு நல்லச் சான்று. மதங்கள் தோன்று வதற்கு முன்னே முருகக் கடவுள் வழிப்பாடு தோன்றிவிட்டது. தமிழர்களை இனிமேல் சோதனை செய்யவேண்டாம் எல்லாம் குடும்ப ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள இத்தனை முரணப்பாடுகள்
.வேண்டாம் இந்தவிபரீத விளையாட்டு
ஜெயிக்கிற குதிரையில் பணம் கட்டவேண்டியதுதான். மதத்துவேஷமும், இனத்துவேஷமும் இல்லாவிட்டால் பாவக்கா பாஜக்காத்தான்.
உன்னைப் போன்ற மதமாறி கும்பல்களுக்கு பாஜகவை நினைத்தால் பாவக்காயாக கசக்கத்தான் செய்யும் என்ன செய்வது வாலைசுருட்டிக் கொண்டு அடங்கிக் கிடப்பதை தவிர உனக்கு வேறுவழியில்ல.மேலும்
-
ரூ.4 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது
-
தொழில் போட்டியில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை
-
'அம்ரித் பாரத்' பணி சரியில்லை கோட்ட மேலாளர் அதிருப்தி
-
தி.மலை கோவிலில் புரோக்கர்கள் ஆதிக்கம் அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்குமா?
-
இலங்கைத்தமிழர் முகாம் முன்னாள் தலைவருக்கு வெட்டு
-
காரைக்குடி ரயில்வே ஸ்டேஷனில் ரூ.13 கோடியில் நடந்த பணிகள்