தமிழர் திருநாள் நெய்வேலியில் கொண்டாட்டம்

நெய்வேலி ஜன. 17-: நெய்வேலியில் தமிழர் திருநாள் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நெய்வேலி மத்திய பஸ் நிலையம் மற்றும் டவுன்ஷிப் வட்டம் 25 ல் உள்ள தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி உருவ சிலைகளுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.

இது குறித்து அவர் பேசுகையில், தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய தி.மு.க., தலைவர்களின் வழி நடந்து தமிழக முன்னேற்றத்திற்காக அயராது உழைப்போம்,' என்றார்.

நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை பொதுக்குழு உறுப்பினர் புகழேந்தி, நெய்வேலி நகர செயலாளர் குருநாதன், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தோஷ்குமார் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், என்.எல்.சி., - தொ.மு.ச., தலைமை நிர்வாகிகள், இளைஞரணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement