பதக்கத்தை தரலாம்; பரிசை தர முடியாது: டிரம்ப் -மச்சாடோ விவகாரத்தில் நோபல் கமிட்டி பதில்

28

நமது நிருபர்
நோபல் பரிசு வெற்றியாளரிடமிருந்து பிரிக்க முடியாதது. ஆனால் பதக்கத்தை வேறு எவருக்கும் கொடுக்கலாம் என விருது வழங்கும் அமைப்பு தெரிவித்துள்ளது.


வெனிசுலா எதிர்க்​கட்சி தலை​வர் மரியா கொரினா மச்​சாடோ, தனக்கு வழங்​கப்​பட்ட அமைதிக்கான நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு வழங்கியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்து நோபல் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பதக்கம் அல்லது பரிசுத் தொகையை என்ன செய்தாலும், பரிசைப் பெறுபவராக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டவரே, நோபல் பரிசு பெற்றவர்கள் பட்டியலில் தொடர்ந்து இருக்கிறார்.


ஒரு பரிசு பெற்றவர் என்ன செய்யலாம் என்பது குறித்து நோபல் அறக்கட்டளையின் சட்டங்களில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. இதன் பொருள், பரிசு பெற்றவர் இந்தப் பொருட்களை வைத்திருக்க, கொடுக்க, விற்க அல்லது நன்கொடை அளிக்க சுதந்திரம் இருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவோ, அறிவிக்கப்பட்டவுடன் மாற்றவோ அல்லது எந்த நிலையிலும் ரத்து செய்யவோ முடியாது. இந்த முடிவு இறுதியானது மற்றும் எல்லா காலத்திற்கும் பொருந்தும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement