மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்

103

சென்னை: குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும்; ஆண்களுக்கு கட்டணம் இல்லாத டவுன் பஸ் பயண வசதி செய்யப்படும் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தேர்தல் வாக்குறுதியாக அறிவித்துள்ளார்.

இந்தாண்டில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, எம்ஜிஆரின் 109வது பிறந்த நாளான இன்று, முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இபிஎஸ் வெளியிட்டார்.



அவர் அறிவித்ததாவது;
1. மகளிர் குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மாதம் ரூ.2000 உதவித்தொகை வழங்கப்படும். குடும்பத் தலைவியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

2. டவுன் பஸ்களில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் கட்டணமில்லாத பஸ் பயணத் திட்டம் செயல்படுத்தப்படும். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

3. அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் குடியிருப்பதற்கு சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். நகரப்பகுதிகளில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு, அரசே இடம் வாங்கி இலவசமாக அடுக்குமாடி வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

4. 100 நாட்கள் வேலைவாய்ப்புத் திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும்.

5. ரூ.25,000 மானியத்துடன், 5 லட்சம் பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கப்படும். இவ்வாறு அறிவித்தார்.

Advertisement