ராம்குமார்-ஜீவன் அபாரம்: ஐ.டி.எப்., டென்னிசில் சாம்பியன்

சென்னை: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார், ஜீவன் ஜோடி சாம்பியன் ஆனது.

சென்னையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி, சகநாட்டை சேர்ந்த பிரஜ்வால் தேவ், நிதின் குமார் சின்ஹா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 4-6 என இழந்த ராம்குமார், ஜீவன் ஜோடி, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தது. வெற்றியாளரை நிர்ணயிக்கும் 'சூப்பர் டை பிரேக்கரில்' மீண்டும் அசத்திய ராம்குமார், ஜீவன் ஜோடி 10-8 என தன்வசப்படுத்தியது.
ஒரு மணி நேரம், 29 நிமிடம் நீடித்த போட்டியில் ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் ஜோடி 4-6, 6-3, 10-8 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Advertisement