உலக விளையாட்டு செய்திகள்
அரையிறுதியில் ஜப்பான்
ரியாத்: சவுதி அரேபியாவில், 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கால்பந்து 7வது சீசன் நடக்கிறது. ஜப்பான், ஜோர்டான் அணிகள் மோதிய காலிறுதி, கூடுதல் நேரத்தின் முடிவில் 1-1 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய ஜப்பான் அணி 4-2 என வெற்றி பெற்றது.
பலே பஹ்ரைன்
சபா அல்-சலேம்: குவைத்தில், ஆசிய ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் 22வது சீசன் நடக்கிறது. இதன் 'பி' பிரிவு லீக் போட்டியில் பஹ்ரைன், ஜோர்டான் அணிகள் மோதின. இதில் பஹ்ரைன் அணி 32-21 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு லீக் போட்டியில் ஈராக் அணி 27-22 என, சீனாவை தோற்கடித்தது.
மாலத்தீவு ஆதிக்கம்
பாங்காக்: தாய்லாந்தில், தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (எஸ்.ஏ.எப்.எப்.,) சார்பில் புட்சல் (ஐவர் கால்பந்து) சாம்பியன்ஷிப் முதல் சீசன் நடக்கிறது. லீக் போட்டியில் மாலத்தீவு, வங்கதேசம் அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த மாலத்தீவு அணி 6-1 என தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்தது.
எக்ஸ்டிராஸ்
* தாய்லாந்தில் நடந்த பாங்காக் ஓபன்-2 ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் பைனலில், இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ஆஸ்திரியாவின் ஓபர்லீட்னர் ஜோடி 6-3, 7-6 என இந்தியாவின் அனிருத் சந்திரசேகர், ஜப்பானின் யுசூகி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
* ஆசிய குத்துச்சண்டை கவுன்சில் உறுப்பினராக, முன்னாள் இந்திய வீரர் விஜேந்தர் சிங் 40, நியமிக்கப்பட்டார். பீஜிங்கில் (2008) அசத்திய இவர், ஒலிம்பிக் குத்துச்சண்டை பதக்கம் (வெண்கலம்) கைப்பற்றிய முதல் இந்தியரானார்.
* பெங்களூருவில் இன்று நடக்கவுள்ள விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் பைனலில் விதர்பா, சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.
* அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் நடந்த சர்வதேச ஸ்குவாஷ் தொடரின் காலிறுதியில் இந்திய வீரர் வீர் சோட்ரானி 0-3 (3-11, 7-11, 8-11) என மெக்சிகோவின் லியோனல் கார்டனாசிடம் தோல்வியடைந்தார்.
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு