ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாதிப்பாரா ஜானிக் சின்னர்
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபனில் 'ஹாட்ரிக்' பட்டம் வெல்ல காத்திருக்கிறார் இத்தாலியின் ஜானிக் சின்னர்.
மெல்போர்னில், ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் இன்று துவங்குகிறது. ஆண்கள் ஒற்றையரில், கடந்த இரண்டு சீசனில் (2024, 2025) கோப்பை வென்ற உலகின் 'நம்பர்-2' இத்தாலியின் ஜானிக் சின்னர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இவர், இம்முறை சாதித்தால் 'ஹாட்ரிக்' பட்டத்தை கைப்பற்றலாம். உலகின் 'நம்பர்-1' ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஆஸ்திரேலிய ஓபனில் 2 முறை (2024, 2025) காலிறுதி வரை சென்றிருந்தார். இம்முறை அசத்தினால் இங்கு தனது முதல் பட்டம் வெல்லலாம்.
இத்தொடரில் அதிகபட்சமாக 10 முறை சாம்பியன் பட்டம் வென்ற செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கடந்த இரண்டு ஆண்டுகளாக கிராண்ட்ஸ்லாம் வென்றதில்லை. இம்முறை எழுச்சி கண்டால் தனது 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றலாம். இவர்களை தவிர ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல போராடலாம்.
சபலென்கா நம்பிக்கை: பெண்கள் ஒற்றையரில், உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, கடந்த ஆண்டு பைனலில் தோல்வியடைந்து 'ஹாட்ரிக்' பட்டம் வெல்லும் வாய்ப்பை இழந்தார். சமீபத்தில் பிரிஸ்பேன் சர்வதேச தொடரில் கோப்பை வென்ற இவர், இம்முறை சுதாரித்தால் இங்கு தனது 3வது பட்டம் வெல்லலாம்.
போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப், அனிசிமோவா, ஜெசிகா பெகுலா, 'நடப்பு சாம்பியன்' மடிசன் கீஸ், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்சிக், கஜகஸ்தானின் எலினா ரிபாகினா உள்ளிட்டோரும் கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.
'வைல்டு கார்டு' சிறப்பு அனுமதி பெற்ற அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 45, ஆஸ்திரேலிய ஓபனில் 5 ஆண்டுகளுக்கு பின் களமிறங்குகிறார். இன்று, முதல் சுற்றில் விளையாடவுள்ள இவர், இத்தொடரில் பங்கேற்ற மூத்த வீராங்கனை என்ற சாதனை படைக்கவுள்ளார்.
பரிசு எவ்வளவு
ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையரில் கோப்பை வெல்லும் வீரர்/வீராங்கனைக்கு ரூ. 37.64 கோடி பரிசாக வழங்கப்பட உள்ளது. இது, கடந்த ஆண்டை விட 19 சதவீதம் அதிகம். இரண்டாம் இடம் பிடிப்பவர்களுக்கு ரூ. 19.50 கோடி பரிசாக கிடைக்கும்.
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு