தொழில் போட்டியில் அ.தி.மு.க., நிர்வாகி கொலை

திருமங்கலம்: திருமங்கலம் அருகே தொழில் போட்டியில், அ.தி.மு.க., நிர்வாகி, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.

மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டில், அ.தி.மு.க., மீனவர் அணி மதுரை கிழக்கு மாவட்ட இணை செயலர் பிச்சை ராஜன், 42; 'மைக் செட ் ' கடை வைத்திருந்தார். அப்பகுதியை சேர்ந்த பாலமுருகன், 32, என்பவரும் மைக் செட் கடை வைத்துள்ளார். இருவருக்கும் தொழில் போட்டி காரணமாக விரோதம் இருந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அப்பகுதி காளியம்மன் கோவில் தெருவில் நடந்த விழாவில், பிச்சை ராஜன் மைக் செட் அமைத்திருந்தார். நேற்று மாலை, பாலமுருகன் பிச்சை ராஜனுடன் இதுதொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், கத்தியால் பிச்சை ராஜனின் கழுத்தில் குத்தியதில், அவர் உயிரிழந்தார். பாலமுருகனை, ஆஸ்டின்பட்டி போலீசார் தேடுகின்றனர்.

Advertisement