ரூ.4 கோடி கஞ்சா கடத்திய வாலிபர் கைது

திருச்சி: சிங்கப்பூரில் இருந்து, 4 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சாவை கடத்தி வந்த கர்நாடகா வாலிபரை, திருச்சி விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு, நேற்று அதிகாலை, 'ஸ்கூட்' விமானம் வந்தது. அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, ஒரு பயணி தன் பையில், 4 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர்ரக கஞ்சாவை கடத்தி வந்தது தெரிந்தது. அதன் மதிப்பு, 4 கோடி ரூபாய்.

கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை கடத்தி வந்த கர்நாடகாவை சேர்ந்த ரஷித் அப்துல், 35, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement