இலங்கைத்தமிழர் முகாம் முன்னாள் தலைவருக்கு வெட்டு

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் ஊருணி இலங்கை தமிழர் முகாம் முன்னாள் தலைவர் ஜெயேந்திரனை 49, அரிவாளால் மூவர் வெட்டியதில் பலத்த காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மூங்கில் ஊருணியில் இலங்கைத்தமிழர் முகாம் செயல்படுகிறது. இங்கு 150 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் குடும்பத்தினருடன் வசிக்கின்றனர். இம்முகாம் தலைவராக செல்லதுரை மகன் ஜெயேந்திரன் 49, ஏற்கனவே இருந்தார்.

நேற்றிரவு 9:00 மணிக்கு அவர் வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத 3 பேர் ஆயுதங்களுடன் சென்று வெட்டினர். மேலும் அவரது டூவீலரையும் சேதப்படுத்திவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த ஜெயந்திரனை போலீசார் 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். போலீசார் தாக்குதலுக்கான காரணம், தாக்கியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement