புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் நாளை அடிக்கல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட உள்ள நீர்த்்தேக்கத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் நாளை அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை மாநகரின் மக்கள் தொகைக்கு ஏற்ப, சென்னை அருகில் உள்ள ஏரிகளில் இருந்தும், கடலுார் மாவட்டம் வீராணம் ஏரியில் இருந்தும், பெருமளவு குடிநீர் பெறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், கடல்நீரில் இருந்தும் குடிநீர் உற்பத்தி செய்யப்படுகிறது.

இருப்பினும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதையடுத்து, மாமல்லபுரம் அருகில் நெம்மேலியில் 471 கோடி ரூபாய் மதிப்பில், புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது. அதற்காக, பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், 5,161 ஏக்கர் நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை, முதல்வர் ஸ்டாலின் நாளை காலை 11:00 மணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைக்கிறார்.

Advertisement