சிரியா மீது அமெரிக்கா தாக்குதல்: அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டதாக அறிவிப்பு

6

டமாஸ்கஸ்: சிரியாவில் அமெரிக்க படைகள் நடத்திய திடீர் தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்த அல்கொய்தா முக்கிய தலைவன் கொல்லப்பட்டான்.


@1br2025ம் ஆண்டு டிசம்பரில் சிரியாவின் பால்மைரா நகரில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேரும், மொழி பெயர்ப்பாளர் ஒருவரும் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதத்தில் சிரியா மீது அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள் இருப்பிடங்களை கண்டறிந்து அவர்களை தொடர்ந்து அமெரிக்கா அழித்து வருகிறது. அதன் முக்கிய கட்டமாக, வடகிழக்கு சிரியாவில் அமெரிக்கா அதிரடியாக தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் நேரடியாக தொடர்பு வைத்திருந்த அல் கொய்தா துணைத் தலைவன் பிலால் ஹசன் அல் ஜாசிம் என்பவனை கொன்றுவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.


அமெரிக்காவின் மத்திய படைகள் இந்த தாக்குதலை அரங்கேற்றியதாகவும், கொல்லப்பட்டவன் கடந்த மாதம் அமெரிக்க படை வீரர்களை கொன்ற சம்பவத்தில் தொடர்பு உடையவன் என்று பாதுகாப்பு படையின் கமாண்டர் பிராட் கூப்பர் அறிவித்து உள்ளார்.

அமெரிக்க மக்கள் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல்களை தொடுப்பவர்கள், அதற்கான சதிகளில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பான இடம் இல்லை. அவர்களை கண்டுபிடிப்போம் என்றும் பிராட் கூப்பர் தெரிவித்து உள்ளார்.

Advertisement