சாராயம் பதுக்கிய வாலிபர் கைது

விருத்தாசலம்: புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றபோது, பழமலைநாதர் நகரில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவர், அதே பகுதியை சேர்ந்த குமார் மகன் குமரேசன், 25, என்பதும், அவரது பைக்கில் 1 லிட்டர் பாட்டிலில் புதுச்சேரி சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் தெரிந்தது.

விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, குமரேசனை கைது செய்தனர். அவரிடமிருந்து சாராயம், பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement