குண்டும், குழியுமான கொளத்துார் சாலையை சீரமைக்க கோரிக்கை
பவுஞ்சூர்: கொடூர் ஊராட்சிக்குட்டப்பட்ட கொளத்துார் செல்லும் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதாலும், சாலையில் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து இருப்பதாலும், சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆக்கிணாம்பட்டு கூட்ரோட்டில் இருந்து கொளத்துார் செல்லும் சாலை உள்ளது.
இங்கிருந்து, ெகாளத்துார், ெகாடூர், சத்தியமங்கலம் போன்ற கிராமங்களுக்கு செல்பவர்கள் அதிகளவில், இருசக்கர வாகனங்களில் செல்கின்றனர்.
அரசு மற்றும் தனியார் பேருந்துகளும் இச்சாலையில் பயணிக்கின்றன.
கல்குவாரி லாரிகளும் அதிகளவில் செல்வதால், சாலையின் பல இடங்கள் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
கல்குவாரி திரும்பும்இடத்தில் சாலை முழுதும் ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பரவி கிடக்கின்றன.
இதனால், வாகன ஓட்டிகள் பகல் நேரங்களிலேயே தடுமாறிச் செல்கின்றனர். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் விழுந்து செல் லும் சூழல் உள்ளது.
ஏதேனும் விபத்து அபாயம் ஏற்படுவதற்கு முன் வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி