சமத்துவ பொங்கல் விழா போட்டி சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பரிசு வழங்கல்

நெய்வேலி: நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே உள்ள எஸ்.பி. டி., மணி நகர் பூங்காவில், தி.மு.க., சார்பில் திராவிட சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

இதில் கோலப் போட்டி, சிலம்பம், மியூசிக்கல் சேர், ஓட்டப்பந்தயம், மாறுவேடம், தனித்திறன் போட்டி, கயிறு இழுத்தல், உறி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு தமிழ் கலாசாரம் மற்றும் பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள் நடந்தன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் தொகுதி பார்வையாளர் துரைசாமி, குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், அவைத்தலைவர் வீர ராமச்சந்திரன், பொருளாளர் ஆனந்த ஜோதி, என்.எல்.சி., - தொ.மு.ச., பொருளாளர் அப்துல் மஜீத், அலுவலக செயலாளர் சீனுவாசன், முன்னாள் வடக்குத்து ஊராட்சி மன்ற துணை தலைவர் சடையப்பன், வடக்குத்து ஊராட்சி செயலாளர் சிவக்குமார், முன்னாள் தொ.மு.ச., தலைவர் சிவந்தான், காண்ட்ராக்டர் கோவிந்தராஜன், தி.மு.க., நகர நிர்வாகிகள் சண்முகானந்தம், ராமகருப்பன், தமிழ்ச்செல்வன், பிச்சையா, நடராஜன், ஏழுமலை, சுப்பையா, மணிகண்டன், ராஜா பிரபு, சிவசங்கரவேல், அருள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயந்தி, எல்வின் பிரின்சி, ஜெயப்பிரியா, கிருத்திகா, சந்துஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement