ராம்கோவில் விளையாட்டு விழா
ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ குரூப் டெக்ஸ்டைல்ஸ் பிரிவு சார்பில் 56 வது பொங்கல் விளையாட்டு விழா நடந்தது.
ராம்கோ குரூப் சேர்மன் பி.ஆர் வெங்கட்ராமராஜா தலைமை வகித்தார். இயக்குனர்கள் ஸ்ரீகண்டன் ராஜா, ராம்குமார் ராஜா, நிர்வாக இயக்குனர்கள் சாரதா தீபா, ஸ்ரீராமராஜா, டெக்ஸ்டைல்ஸ் பிரிவு தலைவர் மோகன்ரெங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தொழிலாளர்களுக்கு ரூ. 64.50 லட்சம் பரிசும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
ராம்கோ டெக்ஸ்டைல் உதவி பொது மேலாளர் சண்முகராஜ் வரவேற்றார். தொழிற்சங்கம் சார்பில் பொற்கொடி, ராக்கப்பன் விஜயன், வைரமுத்து வாழ்த்தினர்.
சேர்மன் பி.ஆர் வெங்கட்ராம ராஜா பேசுகையில், உலக சந்தையில் தொடர்ந்து நிலைத்து இருக்க தரமான நுால்களை உற்பத்தி செய்து வருகிறோம்.
சுற்றுச்சூழல் மாசு படுவதை தடுக்க கார்பன் நியூட்ரல் பகுதியாக ராஜபாளையத்தை மாற்ற அரசுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். இதற்காக செயலாற்றி வரும் மேனேஜிங் டைரக்டர் நிர்மலா ராஜூ-வை பாராட்டுகிறேன், என்றார்.
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு