வல்லக்கோட்டை முருகன் கோவிலில் காணும் பொங்கலுக்கு சிறப்பு அபிஷேகம்

காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், காணும் பொங்கலை முன்னிட்டு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது.

ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டையில் வள்ளி தெய்வானை சமேத முருகன் கோவில் உள்ளது.

நேற்று, காணும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, உற்சவருக்கு பல்வேறு விதமான வாசனை திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது.

இதையடுத்து, வள்ளி தெய்வானை சமேத முருகன், மயில் மாலை அலங்காரம், வெண் சாமந்தி, மஞ்சள் சாமந்தி பூ அலங்காரத்தில் உத்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement