கைப்பந்து போட்டி பிச்சிவாக்கம் இன்பா அணியினர் முதலிடம்

காஞ்சிபுரம்: பொங்கல் தின சிறப்பு கைப்பந்து விளையாட்டுப் போட்டியில், பிச்சிவாக்கம் இன்பா அணியினர் முதலிடம் பிடித்தனர்.

காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கிராமத்தில், பொங்கல் தின சிறப்பு கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடந்தது. இந்த போட்டியில், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, கைப்பந்து அணியினர் போட்டியிட்டனர்.

இதில், காஞ்சிபுரம் மாவட்டம், பிச்சிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த இன்பா அணியினர் முதலிடமும். கோவிந்தவாடி கிராமம் ஸ்பைக்கர் அணியினர் இரண்டாவது இடமும். திருச்சியைச் சேர்ந்த தினேஷ் நண்பர்கள் அணியினர் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

முதலிடம் பிடித்த பிச்சிவாக்கம் அணியினருக்கு, ரொக்கம் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Advertisement