காஞ்சியில் காணும் பொங்கல் கோவில்களில் குவிந்த பக்தர்கள்
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
காணும் பொங்கலான நேற்று, காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜ பெருமாள், அஷ்டபுஜ பெருமாள், காமாட்சியம்மன், ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள், குமரகோட்டம் முருகன், ஏகாம்பரநாதர், கைலாசநாதர் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
இக்கோவில்களில், உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட பக்தர்களும், சபரிமலை அய்யப்பன், மேல்மருவத்துார் செவ்வாடை அணிந்த பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். இக்கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
-
பழைய ஓய்வூதிய திட்டம் கோரி பிப்., 3 முதல் வேலைநிறுத்தம் 'ஆக்டோ ஜியோ' அறிவிப்பு
-
ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்
-
கல்வி நிறுவனங்களில் சமத்துவ குழு ஜாதியை வளர்க்கும் யு.ஜி.சி., உத்தரவு
Advertisement
Advertisement