நாளை முதல் ஆக்டோ -ஜியோ போராட்டம்

மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர்ந்து போராடி வரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும், பகுதிநேர ஆசிரியர் கண்ணன் இறப்புக்கு காரணமான அரசு நிர்வாகத்தை கண்டித்தும் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தப்படுகிறது.

தலைமை அமைப்பாளர் பாலசுப்ரமணியன், இணை அமைப்பாளர்கள் ஆரோக்கியதாஸ், இந்திரா தெரிவித்துள்ளதாவது: பிப்.3 முதல் நடக்கவுள்ள காலவரையற்ற வேலை நிறுத்த ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஜன.,19ல் ஆர்ப்பாட்டம் நடத்துவது, ஜன., 30 வரை மாநிலம் முழுவதும் நான்கு குழுக்களாக அரசு அலுவலகங்கள், பள்ளிகள் ஊழியர்களை சந்திப்பது, ஜன.,30ல் நான்கு குழுக்களும் சென்னை அரசு அலுவலகங்களில் பிரசாரம் செய்வது, ஜன.31, பிப்.1ல் வேலைநிறுத்த ஆயத்த மாநாட்டை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது என தெரிவித்துள்ளனர்.

Advertisement