புதிய அம்ரித் ரயில்: பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி

சென்னை: தமிழகத்தில்பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் வகையிலான புதிய அம்ரித் ரயிலுக்கு அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடி, மத்திய ரயில்வேஅமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மத்திய அமைச்சர் முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென் மாநிலங்களின் வெவ்வேறு பகுதிகளை ரயில் மூலம் இணைக்கும் வகையில், சென்னை-கன்னியாகுமரி இடையிலான ரயில் போக்குவரத்தை, திருவனந்தபுரம், செகந்தராபாத் மற்றும் மங்களூரு வழியாக இயக்குவது தொடர்பாக, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ஆலோசனை நடத்தியிருந்தேன்.


தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களையும், முக்கிய ரயில் நிலையங்களையும் இணைப்பதற்கான கோரிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கும் மத்திய அரசு, தற்போது மேற்கண்ட ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய அம்ரித் பாரத் ரயில் இயக்க அனுமதி வழங்கியிருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

அதன்படி அம்ரித் பாரத் ரயிலானது, கன்னியாகுமரி, மங்களூரு, சர்லாபள்ளி, தாம்பரம் மற்றும் திருவனந்தபுரம் போன்ற முக்கிய நகரங்களையும், அதற்கு உட்பட்ட ரயில் நிலையங்களையும் இணைக்கின்றது. இதன்மூலம், பொதுமக்களின் தனிப்பட்ட பயணங்களும் தொழில் ரீதியிலான பயணங்களும் எளிதாகவுள்ளது.

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் தொடர்ந்து தீர்வு கண்டு வரும் பிரதமர் மோடிக்கும், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்க்கும் தமிழக மக்கள் சார்பாக நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் முருகன் கூறியுள்ளார்.

Advertisement