பாஜ தேர்தல் அறிக்கை தயாரிக்க தமிழிசை தலைமையில் குழு
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அறிக்கை தயாரிக்க முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு திமுகவில் கனிமொழி தலைமையில் தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலும் தேர்தல் அறிக்கை குழு தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜவின் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முன்னாள் மாநில தலைவரும், முன்னாள் கவர்னருமான தமிழிசை சவுந்திரராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்
இக்குழுவில் மாநில துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, கே.பி.ராமலிங்கம், கனகசபாபதி
மாநில பொதுச்செயலாளர்கள் ராமசீனிவாசன், கார்த்தியாயினி,
தேசிய பொதுக்குழு உறுப்பினர் நரசிம்மன்,
மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்,
மாநில செய்தி தொடர்பாளர் பிரசாத்,
மாநில தன்னார்வ தொண்டு நிறுவன அமைப்பாளர் அர்ஜூனமூர்த்தி,
தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜலட்சுமி,
மாநில விவசாய அணி பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன்
மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் ஆதித்யா சேதுபதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.