'இது நம்ம ஆட்டம் - 2026' போட்டிகள் பங்கேற்க விண்ணப்பிக்க அழைப்பு
கிருஷ்ணகிரி: ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் நடக்கும் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா - 'இது நம்ம ஆட்டம் - 2026' போட்டிகளில் பங்கேற்க வீரர், வீராங்
கனைகள் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொ) நடராஜ முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வரும், 22 முதல் பிப்., 8 வரை தமிழ்நாடு முழுவதும், ஒன்றிய, மாவட்ட, மாநில அளவில் முதல்வர் இளைஞர் விளையாட்டு திருவிழா, 'இது நம்ம ஆட்டம் - 2026' போட்டிகள் நடக்கிறது. கிருஷ்ணகிரி ஒன்றிய அளவில், தனிநபர் மற்றும் குழுப்போட்டி-களில் முதல் இடத்திற்கு தலா, 3,000 ரூபாய், 2ம் இடம், 2,000 ரூபாய், 3ம் இடம், 1,000 ரூபாய் பரிசும், மாவட்ட அளவில் முத-லிடம், 6,000 ரூபாய், 2ம் இடம், 4,000 ரூபாய், 3ம் இடம், 2,000 ரூபாய், மாநில அளவில் அணி பிரிவில் முதலிடம், 75,000 ரூபாய், 2ம் இடம், 50,000 ரூபாய், 3ம் இடம், 25,000 ரூபாய் பரிசு வழங்கப்படுகிறது.
ஒன்றிய, மாவட்ட அளவில், தடகளம், 100 மீ., குண்டு எறிதல், கபடி, வாலிபால், கேரம், கயிறு இழுத்தல், ஸ்ட்ரீட் கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடக்கிறது.
மாவட்ட அளவில், ஓவியம், கோலம் மற்றும் உடல்சார் மாற்றுத்-திறனாளிகளுக்கு, 100 மீ., ஓட்டமும், பார்வைசார் மாற்றுத்திறனா-ளிகளுக்கு குண்டு எறிதல் போட்டியும், அறிவுசார் மாற்றுத்திறனா-ளிகளுக்கு, 100 மீ., ஓட்டமும், செவிசார் மாற்றுத்திறனாளிக-ளுக்கு, 100 மீ., ஓட்டமும் நடக்கிறது. 16 முதல், 35 வயது வரை-யுள்ள வீரர், வீராங்கனைகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்-பாட்டு ஆணையத்தின் இணையதளம், www.sdat.tn.gov.in/ www.cmyouthfestival.sdat.in மூலம் வரும், 21 வரை முன்பதிவு
செய்யலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்
-
டிரம்ப்புக்கு எதிர்ப்பு: அமெரிக்காவுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை நிறுத்தியது ஐரோப்பிய யூனியன்
-
ஏழைகளுக்கான திட்டங்களை தடுக்கும் அரசை தண்டிக்க வேண்டும்: பிரதமர் மோடி