வாடிப்பட்டி நீதிமன்றத்தில் சுகாதாரமற்ற கழிப்பறைகள்
வாடிப்பட்டி: வாடிப்பட்டி நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி அசுத்தமான நிலையில் உள்ளதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.
இங்கு 2021ல் ரூ 6.77 கோடியில் நீதிமன்றம் கட்டப்பட்டது. மாவட்ட உரிமையியல், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. வழக்குகள் தொடர்பாக போலீசார், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என தினமும் 500க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.
இங்குள்ள கழிப்பறைகள் பராமரிப்பின்றி பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு லாயக்கற்ற நிலையில் துர்நாற்றம் வீசுகிறது.
அவசரத்திற்கு பயன்படுத்துவோர் நோய் தொற்றால் பாதிக்கும் நிலை உள்ளது. கழிப்பறைக்குள் 'பான்பராக்' எச்சில் கரைகளாக, பார்த்தாலே எரிச்சலை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது.
இதனால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு 'உவ்வே' ஆகும் அளவு கேடுடன் உள்ளது.
வழக்கிற்காக காத்திருப்போர் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கை பொத்திக் கொண்டு சமாளிக்கின்றனர். கழிப்பறைகளை சுத்தம் செய்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
புதிய அம்ரித் ரயில்: பிரதமருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி
-
தேர்தல் அறிக்கை தயாரிக்க பாஜவில் குழு
-
வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் தமிழகம்: கவர்னர் ரவி
-
கொரிய வீராங்கனை சாம்பியன்: இந்திய ஓபன் பாட்மின்டனில்
-
எல்லைப்பாதுகாப்பில் முன்பைவிட இந்தியாவுக்கு கூடுதல் பலம்; ராஜ்நாத் சிங்
-
ஸ்டாலின் ஆட்சியை ஒழித்து விரைவில் தமிழகம் மீட்டெடுக்கப்படும்; நயினார் நாகேந்திரன்