காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது: பிரதமர் மோடி பேச்சு

8


கவுஹாத்தி: காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


அசாமின் கலியாபூரில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று, மீண்டும் ஒருமுறை காசிரங்காவிற்கு வரும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. எனது முந்தைய வருகையின் நினைவுகள் மீண்டும் வருகின்றன. இரண்டு ஆண்டுக்கு முன் காசிரங்கா தேசிய பூங்காவில் நான் கழித்த தருணங்கள் எனது வாழ்க்கையின் மிகவும் சிறப்பு வாய்ந்த அனுபவங்களில் ஒன்றாகும்.


மஹாராஷ்டிரா மற்றும் கேரள உள்ளாட்சித் தேர்தல்களில் பாஜ வெற்றி பெற்றது. வாக்காளர்கள் நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்காக பாஜவை நம்புகிறார்கள். நாட்டில் உள்ள அனைவரின் முதல் தேர்வாக பாஜ மாறிவிட்டது. கடந்த ஒரு ஆண்டுகளில், பாஜ மீதான நாட்டின் நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில், பீஹாரில் தேர்தல்கள் நடத்தப்பட்டன. மக்கள் பாஜவுக்கு சாதனை படைக்கும் ஆணையை வழங்கினர்.


இரண்டு நாட்களுக்கு முன்பு, மஹாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுக்கான மாநகராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகின. உலகின் மிகப்பெரிய மாநகராட்சிகளில் ஒன்றான மும்பை, பாஜவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை வழங்கியது. பாஜ முதல் முறையாக வெற்றி பெற்றது.
கேரள மாநகராட்சித் தேர்தலிலும், மக்கள் பாஜவை ஆதரித்தனர். திருவனந்தபுரத்தில் முதல் முறையாக பாஜ மேயர் உள்ளார். சமீபத்திய தேர்தல் முடிவுகள் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளன.
இன்றைய நாட்டின் வாக்காளர்கள் நல்லாட்சி, வளர்ச்சியை விரும்புகிறார்கள்; அவர்கள் வளர்ச்சி மற்றும் தங்கள் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்த விரும்புகிறார்கள். அதனால்தான் அவர்கள் பாஜவை விரும்புகிறார்கள்.


காங்கிரஸ் கட்சியின் எதிர்மறை அரசியலை நாடு தொடர்ந்து நிராகரித்து வருகிறது.
காங்கிரஸ் கட்சி பிறந்த நகரமான மும்பையில், அது இப்போது ஐந்தாவது இடத்திற்கு பின் தங்கி உள்ளது.

காங்கிரஸ் பல ஆண்டுகளாக ஆட்சி செய்த மாநிலமான மஹாராஷ்டிராவில், கட்சி முற்றிலும் ஓரங்கட்டப்பட்டுள்ளது. வளர்ச்சிக்கான எந்த பணிகளையும் செய்யாததால் காங்கிரஸ் கட்சி மக்களின் நம்பிக்கையை இழந்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement