இன்று டில்லி வருகிறார் யு.ஏ.இ., அதிபர் அல் நயான்

11

புதுடில்லி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் ஜாயத் அல் நயான், இன்று இந்தியா வருகிறார்.


மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் அதிபராக முகமது பின் ஜாயத் அல் நயான், அரை நாள் பயணமாக இன்று டில்லி வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே பொருளாதாரம், வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகளில் உறுதியான ஒத்துழைப்பு நீடிக்கும் நிலையில், அல் நயானின் இந்திய வருகை எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிற்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்கள் மத்தியில் அதிபர் அல் நயானின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Advertisement