ரூ.1.66 லட்சம் கோடி அன்னிய முதலீடு வெளியேற்றம்

எப் .பி.ஐ., எனும் அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள், இந்திய பங்குச் சந்தையில் தொடர்ந்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இம்மாதம் இதுவரை 22,529 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதற்கு மாறாக, உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ஜனவரியில் மட்டும், இதுவரை 34,076 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கி சந்தைக்கு ஆதரவளித்துள்ளனர்.

இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இன்னும் முடிவுக்கு வராததும், அமெரிக்காவின் கூடுதல் வரி மிரட்டல்களும் சந்தை மனநிலையை பாதித்துள்ளன. கடந்தாண்டு முழுதும் எப்.பி.ஐ.,க்கள் 1.66 லட்சம் கோடி ரூபாய் முத லீட்டை திரும்ப பெற்றனர்.

Advertisement