ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
புதுடில்லி: ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய பெண்கள் அணியில் ஷ்ரேயங்கா பாட்டீல் ('டி-20') தேர்வானார்.
ஆஸ்திரேலியா செல்லவுள்ள இந்திய பெண்கள் அணி, மூன்று 'டி-20' (பிப். 15, 19, 21), மூன்று ஒருநாள் (பிப். 24, 27, மார்ச் 1), ஒரு டெஸ்ட் (மார்ச் 6-9) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் 'டி-20', ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இவ்விரு அணிகளுக்கு கேப்டனாக ஹர்மன்பிரீத் கவுர், துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா நீடிக்கின்றனர். தற்போது நடக்கும் பிரிமியர் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ஷ்ரேயங்கா பாட்டீல், பாரதி புல்மாலி 'டி-20' தொடருக்கு மட்டும் தேர்வாகினர். அருந்ததி ரெட்டி, ஹர்லீன் தியோ, ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டும் இடம் பெற்றுள்ளனர்.
ஷைபாலி வர்மா, ஸ்ரீ சரணி, ரேணுகா தாகூர், வைஷ்ணவி சர்மா, கிராந்தி, ஸ்னே ராணா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ், கமலினி, அமன்ஜோத் கவுர், ஜெமிமா ரோட்ரிக்ஸ், இரு அணிகளுக்கும் தேர்வாகினர்.
டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி பின்னர் அறிவிக்கப்படும்.
மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி