ரூ.4.15 லட்சம் கோடிக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி; இந்தியா புதிய சாதனை

4


புதுடில்லி: 4.15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மின்னணு பொருட்கள் ஏற்றுமதி செய்து பாரதம் சாதனை படைத்து உள்ளது என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2025ம் ஆண்டு நிதியாண்டில் 47 பில்லியன் டாலர்( 4.15 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு மின்னணு பொருட்களை ஏற்றுமதி செய்து பாரதம் சாதனை படைத்துள்ளது. மத்திய அரசின் ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்கள் 30 பில்லியன் டாலர்(2.72 லட்சம் கோடி ரூபாய்) அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.


2015ம் நிதியாண்டுக்கு பிறகு ஏற்றுமதி 11 மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான பெண்கள் பங்களிப்புடன் 25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன. சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தி உள்ளதுடன், இளைஞர்களின் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கூறியுள்ளார்.

Advertisement