ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
ஸ்ரீநகர்; ஜம்முகாஷ்மீரில் லே லடாக் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில். 5.7 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியானது, இமயமலை பகுதியில் பூமியின் மேற்பரப்புக்கு அடியில் 171 கிமீ ஆழத்தில் பதிவாகி உள்ளது. வடமேற்கு காஷ்மீர், லே லடாக் பகுதிகளையும் உலுக்கியது.
நிலநடுக்கம் சில வினாடிகளே நீடித்த போதிலும், அதிர்வுகளை உணர்ந்த மக்கள் தங்களின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து வெளியே வந்தனர். பழைய கட்டடங்கள், விரிசல் விழுந்த கட்டடங்களில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஏதேனும், பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்பது பற்றிய எந்த தகவலும் வெளியாகவில்லை. கார்கிலிலும், காஷ்மீர் பள்ளத்தாக்கின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் கட்டண விலக்கு; நெடுஞ்சாலை ஆணையம் முக்கிய அறிவிப்பு
-
நடுரோட்டில் டயர் வெடித்து கவிழ்ந்த அரசு பஸ்: பயணிகள் 15 பேர் காயம்
-
டில்லியில் தமிழக பாஜ நிர்வாகிகளுடன் பியூஷ் கோயல் முக்கிய ஆலோசனை!
-
கொலம்பியாவில் ஆயுத குழுக்கள் மோதி கொண்டதில் 27 பேர் பலி
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
-
குன்றத்து மலையில் சந்தனக்கூடு விழா: தர்காவின் மேல் முறையீடு நிராகரிப்பு
Advertisement
Advertisement