மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்

லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுலுக்கு இன்று ஆஜராகுமாறு சுல்தான்பூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இன்று ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை; அடுத்த விசாரணை பிப்ரவரி 20ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த 2018ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு பேசியதாக காங்கிரஸ் எம்பி ராகுல் மீது பாஜ தலைவர் விஜய் மிஸ்ரா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக் வழக்கை எம்பி , எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது

இந்த வழக்கில் இன்று (ஜனவரி 19) விசாரணைக்காக காங்கிரஸ் எம்பி ராகுல் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இன்று ராகுல் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ''ராகுல் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்யவிருந்தார். இருப்பினும், அவர் கேரளாவில் இருப்பதால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை'' என்று அவரது வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சுபம் வர்மா, ராகுலுக்கு நேரில் ஆஜராக இறுதி வாய்ப்பை வழங்கி, வழக்கு மீதான அடுத்த விசாரணை பிப்ரவரி 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார். பின்னர் நிருபர்களிடம் ராகுல் வழக்கறிஞர் காசி பிரசாத் சுக்லா கூறியதாவது: கேரளாவில் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்ச்சி காரணமாக, ராகுலால் விசாரணைக்கு வர முடியவில்லை. அடுத்த தேதியில் அவர் ஆஜராக வாய்ப்புள்ளது, என்றார்.

ஏற்கனவே அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த ராகுல், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement