மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
விஜ்க் ஆன் ஜீ: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் அர்ஜுன், சகவீரர் பிரக்ஞானந்தாவை வீழ்த்தினார்.
நெதர்லாந்தில், டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன் நடக்கிறது. இதன் மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர் விளையாடுகின்றனர்.
முதல் சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி மோதினர். இதில் வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், 32வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் (கருப்பு), உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்டரோவ் (வெள்ளி) மோதிய மற்றொரு முதல் சுற்று போட்டி 78வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் (வெள்ளை), 23வது நகர்த்தலில் நெதர்லாந்தின் அனிஷ் கிரியை (கருப்பு) வீழ்த்தினார். இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் (வெள்ளை), ஜெர்மனியின் மத்தியாஸ் புளூபாம் (கருப்பு) மோதிய போட்டி 41வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.
முதல் சுற்றின் முடிவில் வின்சன்ட் கீமர் (ஜெர்மனி), அர்ஜுன் (இந்தியா), ஹான்ஸ் நீமன் (அமெரிக்கா) தலா 1 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி