துாண்டில் வளைவு அமைக்க கோரி கிராமத்தினர் தொடர் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட கடலோர கிராமங்களில் கடல் நீர் அரிப்பால் கடற்கரை பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைத்தடுக்கவும், மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கடலுக்குள் செலுத்துவதற்காகவும் பல இடங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் விஜயாபதி அருகே தோமையார்புரத்தில் தூண்டில் வளைவு அமைக்கப்படாததால், கடற்கரை ஓரங்கள் தொடர்ந்து அரிக்கப்படுகிறது. இதனால் குடியிருப்புகள், மீனவர்களின் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக கிராமத்தினர் குற்றம் சாட்டினர்.

துாண்டில் வளைவு அமைக்க கோரி தோமையார்புரம் கடற்கரையில் நேற்று காலை முதல் கிராம மக்கள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் வரை, இரவு பகல் பாராமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். உடனடியாக அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, தூண்டில் வளைவு அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

Advertisement