அக்கா கொலை: தம்பி கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் அருகே திருமணமான நபருடன் ஏற்பட்ட பழக்கத்தை கைவிட மறுத்த அக்காவை, தம்பியே அரிவாளால் வெட்டிக்கொலை செய்தார்.

தேவர்குளம் அருகே தச்சிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகள் ராதிகா 28. மகன் கண்ணன் 25 . ராதிகாவிற்கு திருமணம் ஆகவில்லை. அவர் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான நபருடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதை கண்ணன் கண்டித்து வந்த நிலையில், குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று மாலை வீட்டில் இருவரும் இருந்தபோது மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கண்ணன், அரிவாளால் ராதிகாவை சரமாரியாக வெட்டினார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்தார். கண்ணனை தேவர்குளம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement