அரசு மருத்துவமனை ஊழியர் மயங்கி விழுந்து சாவு
பாகூர்: அரசு மருத்துவமனை ஊழியர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர் பேட், தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் வீரமணி, 53; புதுச்சேரி அரசு மருத்துவமனையில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு வீரம்மாள் என்ற மனைவியும், இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வீரம்மாள், நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அட்டெண்டராக பணியாற்றி வருகிறார். வீரமணி ரத்த அழுத்தம், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த 17ம் தேதி அவர் திடீரென வீட்டில் மயங்கி வி ழுந்தார். அவரை மீட்டு, பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு, டாக்டர் பரிசோதித்து அ வர், இறந்து விட்டதாக தெரிவித்தார்.
புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் சாதனை: அஸ்வினி வைஷ்ணவ் மகிழ்ச்சி
-
இந்தியாவை மட்டும் விமர்சிப்பது நியாயமற்றது: மத்திய வெளியுறவு அமைச்சர்
-
மத்திய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறு; நீதிமன்ற சம்மனை புறக்கணித்த ராகுல்
-
ஜம்முகாஷ்மீர் லே லடாக் பகுதியில் திடீர் நிலநடுக்கம்; வீடுகளில் இருந்து பீதியில் ஓடிய மக்கள்
-
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு; ராணுவ வீரர் வீர மரணம்
-
எந்த முகத்தை வைத்துக்கொண்டு புறப்பட்டீர்கள்; திமுகவுக்கு அண்ணாமலை காட்டமான கேள்வி
Advertisement
Advertisement