தேவகோட்டையில் வாட்டும் மூடுபனி

தேவகோட்டை: தேவகோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபத்தில் ஒரு நாள் மட்டும் பரவலாக மழை பெய்தது.

தற்போது சில தினங்களாக அனைத்து பகுதிகளிலும் மாலை நேரத்திலேயே பனி பெய்ய தொடங்கி விடுகிறது. நான்கு தினங்களாக காலை வேளையில் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களில் செல்வோர், நடந்து வருவோர் தெரியாத அளவிற்கு மூடு பனியாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.

Advertisement