தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது

15

பெங்களூரு: பெங்களூருவில் தென்கொரிய பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விமான நிலைய ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது குறித்து விமான நிலைய போலீசார் கூறியதாவது; கொரியாவுக்கு செல்வதற்காக வந்த தென்கொரிய பெண் பயணி, டிக்கெட் பரிசோதனை பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரது உடமையை விமான நிலைய ஊழியர் ஆபான் அகமது என்பவர் சோதனையிட்டுள்ளார்.


அப்போது, அவரது பையில் இருக்கும் பொருட்களை சோதனையிட வேண்டும் என்று கூறி, ஆண்கள் கழிவறைக்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண் பயணிடம் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். இதற்கு அந்தப் பெண் பயணி மறுப்பு தெரிவித்துள்ளார்.


இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், விமான நிலைய ஒப்பந்த ஊழியர் ஆபான் அகமது கைது செய்யப்பட்டார். மேலும், சிசிடிவி காட்சிகளை பறிமுதல் செய்து குற்றம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அகமது மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு கூறினர்.

Advertisement