அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர 8 இஸ்லாமிய நாடுகள் ஒப்புதல்

12

நமது நிருபர்




அமெரிக்க அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர பல நாடுகளுக்கு அழைப்புகள் வந்துள்ளன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கும் குழுவில் சேர அழைப்புகள் வந்துள்ளன. தற்போது அதிபர் டிரம்பின் அழைப்பை அரபு நாடுகள் உட்பட எட்டு இஸ்லாமிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இது குறித்து கத்தார், துருக்கி, எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, பாகிஸ்தான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றனர். பல ஐரோப்பிய நாடுகள் அழைப்புகளை நிராகரித்துள்ளன. பல நாடுகள் அதிபர் டிரம்பின் அழைப்பிற்கு இன்னும் பதிலளிக்கவில்லை

இதுவரை அமைதி வாரியத்தில் சேர ஒப்புக்கொண்ட நாடுகள்:

* அர்ஜென்டினா

* ஆர்மீனியா

* அஜர்பைஜான்

* பஹ்ரைன்

* பெலாரஸ்

* எகிப்து

* ஹங்கேரி

* இந்தோனேசியா

* ஜோர்டான்

* கஜகஸ்தான்

* கொசோவோ

* மொராக்கோ

* பாகிஸ்தான்

* கத்தார்

* சவுதி அரேபியா

* துருக்கி

* ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

* உஸ்பெகிஸ்தான்

* வியட்நாம்

* இஸ்ரேல்

குழுவில் சேராத நாடுகள்:




* பிரான்ஸ்

* நார்வே

* ஸ்லோவேனியா

* ஸ்வீடன்

பதில் அளிக்காத நாடுகள்:



* இந்தியா

* பிரிட்டன்

* சீனா

* குரோஷியா

* ஜெர்மனி

* இத்தாலி

* பராகுவே

* ரஷ்யா

* சிங்கப்பூர்

* உக்ரைன்

Advertisement