சக்தி ஓங்காளியம்மன் கோவில் விழா பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன்

நங்கவள்ளி: சக்தி ஓங்காளியம்மன் கோவில் திருவிழாவில், 100க்கும் மேற்-பட்ட பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

நங்கவள்ளி அருகே, சூரப்பள்ளி கிராமம் நொரச்சிவளவில் உள்ள சக்தி ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த, 16ல், கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

அன்றிரவு, முதல் நிலை தேரோட்டம் நடைபெற்றது. 18ல், சக்தி அழைத்தல், அலகு குத்துதல், வண்டி வேடிக்கை எருமை கிடா பலியிடுதல் நடந்தது.


நேற்று திரளான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு தீ மிதி திருவிழா நடந்தது. இதில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்-திக்கடன் செலுத்தினர். இன்று தேர் இழுத்தலும், சத்தாபரணம், சுவாமி மெரமனை, இரவு ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

Advertisement