தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரே நாளில் இன்று சவரனுக்கு ரூ.3,600 அதிரித்தது

4

சென்னை: சென்னையில் இன்று(ஜனவரி 20) மாலை 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,320 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 200 ஆக ஆனது.ஒரு கிராம் தங்கம் விலை ரூ.13,900 ஆக உயர்ந்தது.


இன்று காலை சவரனுக்கு ரூ.1280 ஆக அதிகரித்த நிலையில் தற்போது ரூ.2,320 என உயர்ந்து ஒரே நாளில் ரூ.3,600 ஆக அதிகரித்துள்ளது.


சர்வதேச முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி, தங்கம், வெள்ளியில், அதிக முதலீடு செய்கின்றனர். சர்வதேச சந்தையில், தங்கம், வெள்ளி விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டில் புதிய உச்சத்தை எட்டி வருகின்றன. தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம், கிராம், 13,280 ரூபாய்க்கும், சவரன், 1,06,240 ரூபாய்க்கும் விற்பனையானது.


வெள்ளி கிராம், 310 ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக் கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை. அன்று, முந்தைய நாள் விலையிலேயே ஆபரணங்கள் விற்பனையாகின. நேற்று (ஜனவரி 19) தங்கம் விலை கிராமுக்கு, 170 ரூபாய் உயர்ந்து, 13,450 ரூபாய்க்கு விற்கப்பட்டது.



சவரனுக்கு, 1,360 ரூபாய் அதிகரித்து, 1,07,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு, எட்டு ரூபாய் உயர்ந்து, 318 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு, 8,000 ரூபாய் அதிகரித்து, 3.18 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய நிலவரம்




இந்நிலையில் இன்று (ஜனவரி 20) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 13 ஆயிரத்து 610 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல வெள்ளி விலையும் இன்று புதிய உச்சத்தை எட்டியது.


வெள்ளி விலை கிரா​முக்கு 12 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 330 ரூபாய்க்கும், கிலோவுக்கு 12 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


கடந்த கால தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement