மீண்டும் மீண்டும் குட்டு வாங்கும் திமுக அரசு: நயினார் மகிழ்ச்சி

2

சென்னை: நீதிமன்றத்திடம் மீண்டும் மீண்டும் குட்டு வாங்கும் திமுக அரசு என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:

சனாதன தர்மம் பற்றி மலினமாகக் கருத்து தெரிவித்த திமுக தலைவர்களை எதிர்த்துப் பதிவிட்ட நமது பாஜ சமூக ஊடகப்பிரிவுத் தலைவர் அமித் மாலவியா மீது உள்நோக்கத்துடன் திமுக அரசு பதிந்த வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்து நீதியை நிலைநாட்டியுள்ளது.
அதிலும், சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனத் துணை முதல்வர் உதயநிதி பேசியது தான் வெறுப்புப் பேச்சு என்பதை அழுத்தமாகப் பதிவு செய்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்வதை விடுத்து, அதனை விமர்சிப்பது எப்படி வெறுப்புப் பேச்சாகும் என்று கேள்வி எழுப்பி திமுக அரசிற்கு நீதிமன்றம் சரியான சவுக்கடி கொடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ஒவ்வொரு வழக்கிலும் நீதிமன்றத்திடம் மீண்டும் மீண்டும் குட்டு வாங்கும் ஹிந்து விரோத திமுக அரசு, விரைவில் தமிழக மக்களிடமும் பெரிய குட்டு வாங்கிய பிறகாவது திருந்த வேண்டும்!


இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement