நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ராணுவ வலிமை முக்கியம்: விமானப்படை தளபதி
புதுடில்லி: நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க பொருளாதார வலிமை மட்டும் போதாது. தேச பாதுகாப்புக்கு ராணுவ வலிமையும் முக்கியம் என விமானப்படை தளபதி ஏபி சிங் கூறியுள்ளார்.
டில்லியில் நடந்த மாநாட்டில் அவர் பேசியதாவது: தேச பாதுகாப்பிற்கு முக்கியமானதாக ராணுவ வலிமை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் பொருளாதார ரீதியாக நல்ல நிலையில் இருக்க முடியும். ஆனால், பாதுகாப்பாக இருக்க முடியாது. இதற்கு நமது நாட்டிலேயே உதாரணம் உள்ளது. நாமும் சீனாவும் ஒரு காலத்தில் உலகின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 60 சதவீதத்தை கட்டுப்படுத்தினோம். ஆனால், அது நம்மை காலனித்துவப்படுத்துவதைத் தடுக்கவில்லை. இந்த சக்திகளில்ஏதேனும் ஒன்று மிகவும் முக்கியமானது. ஆனால்,அதை காட்டிலும் ராணுவ வலிமை முக்கியம்.
இல்லையென்றால் நாம் யாராலும் அடி பணிய வைக்கப்படலாம். இதற்கு சமீபத்திய உதாரணம் வெனிசுலா மற்றும் ஈராக் ஆகியவை. ராணுவ சக்தி தான் முக்கியமானது. அதை விட முக்கியம் அந்த ராணுவ சக்தியை பயன்படுத்துவதற்கான விருப்பம்.
ராணுவ பலத்தை காட்ட விருப்பம் இல்லை என்றாலும், தொடர்ந்து நிதானத்தை காட்டலாம், ஆனால்,அநு்த கட்டுப்பாடு ஒரு பலவீனமாகக் கருதப்படும். நீங்கள் வலிமையுடன்இருக்கும் போது , நீங்கள் நிதானத்தை காட்டும்போதுதான், அது திறமையாக பார்க்கப்படும்.
இந்தியாவின் பாதுகாப்புத் தேவைகள் பெரும்பாலும், அதன் அண்டை நாடுகளில் ஏற்படும் நிகழ்வுகளால் வடிவமைக்கப்படுகிறது. சில நேரங்களில்எதிர்வினையாற்றும் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 அதிகரிப்பு
-
அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
-
டில்லி - புனே சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?
-
ஆயுதங்களை தூக்கியெறிந்து விட்டு... நக்சல்களுக்கு அமித் ஷா இறுதி எச்சரிக்கை
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்; முதல்முறையாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை