ஜிடிபி 8 சதவீத வளர்ச்சி பெறும்: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி

4

டாவோஸ்: அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 முதல் 8 சதவீத வளர்ச்சி பெறும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் டாவோஸில் உலகப்பொருளாதார மன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதன் வருடாந்திரக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் முதலீடு செய்யுங்கள்- எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என்ற அமர்வில் இன்று(ஜனவரி21) பேசிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் , இதனை பகிர்ந்து கொண்டார்.

அவர் பேசியதாவது: அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 6 முதல் 8 சதவீத உண்மையான வளர்ச்சியை எட்டும். பொது முதலீடு, உற்பத்தி மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான ஊக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சட்டங்களை எளிமைப்படுத்துதல் ஆகிய நான்கு காரணிகளால் இந்த வளர்ச்சி சாத்தியமாகும். மேலும் தொலைத்தொடர்பு கோபுரங்களை நிறுவுவதற்கான அனுமதி பெறும் காலம் 270 நாட்களில் இருந்து தற்போது 7 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி 7.4 சதவீதம் ஆக இருக்கும் என மத்திய அரசின் ஆரம்பக்கட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. உலகளாவிய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியிலும், முதலீட்டாளர்களுக்கு இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய நாடாகத் திகழ்கிறது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் பேசினார்.

Advertisement