டிரம்ப் அழைப்பை ஏற்றுக் கொண்ட நெதன்யாகு; காசா அமைதி வாரியத்தில் இணைவதாக அறிவிப்பு
டெஹ்ரான்: அமெரிக்கா உருவாக்கி உள்ள காசா அமைதி வாரியத்தில் சேருமாறு டிரம்ப் விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஏற்றுக் கொண்டு உள்ளார்.
இஸ்ரேலுடனான போரில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது காசா. இங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக ஐ.நா.சபைக்கு மாற்றாக அமைதி வாரியம் (Board Of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பு ஒன்றை அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கி இருக்கிறார். இந்த புதிய அமைப்பில் ரூ. 9000 கோடி கட்டணம் செலுத்தி இணைந்து கொள்ளலாம் என்றும் டிரம்ப் கூறி உள்ளார்.
டிரம்ப் அறிவித்துள்ள அமைதி வாரியத்துக்கு அவரே தான் தலைவர். வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, டிரம்ப் மருமகன் ஜெராட் குஸ்னர். பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்ட பலர் உறுப்பினர்கள். டிரம்ப் அறிவித்த புதிய அமைப்பில் இணையலாம் என்று இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா அழைப்பும் விடுத்துள்ளது.
இந் நிலையில், டிரம்பின் அழைப்பை ஏற்று, அதில் இணைந்து கொள்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவித்து உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டு உள்ளது.
அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
உலக நாடுகளின் தலைவர்களைக் கொண்டிருக்கும் அமைதி வாரியத்தில் உறுப்பினராகச் சேருமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். புதிய அமைப்பான டிரம்பின் அமைதி வாரியத்தில் பிரதமர் நெதன்யாகு பணியாற்றுவார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
-
ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்