ஜம்மு காஷ்மீரில் இந்தியா-பாக். ராணுவம் பரஸ்பரம் துப்பாக்கிச்சூடு; எல்லையில் பதற்றம்
குப்வாரா: ஜம்முகாஷ்மீரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் துருப்புகளுக்கு இடையே துப்பாக்கிச் சண்டை எல்லையில் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் கெரான் செக்டாரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டில் பாதுகாப்பை பலப்படுத்தும் விதமாக இந்திய ராணுவத்தினர் உயர்தொழில்நுட்பம் கொண்ட கேமராக்களை நிறுவிக் கொண்டு இருந்தனர். அப்போது மறுபுறம், பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கி சுட்டு தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து இந்திய ராணுவத்தினரும் துப்பாக்கியால் சுட்டு பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் இரு தரப்பிலும் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. இருப்பினும், அடர் வனப்பகுதியில் இந்திய ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.
பயங்கரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகளுக்கு இந்த துப்பாக்கிச்சூடு ஒரு திசை திருப்புதலாக இருக்கலாம் என்று இந்திய ராணுவ உயரதிகாரிகள் கூறி உள்ளனர்.
இந்தியாவை போருக்கு இழுத்தால் டிரம்ப் தலையிடலாம் அல்லவாமேலும்
-
திமுகவை மக்கள் ஆட்சி அரியணையில் அமர்த்தமாட்டார்கள்; நயினார் நாகேந்திரன்
-
விஜயின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கீடு
-
ஆஸ்திரேலியாவில் மீண்டும் பயங்கரம்; துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலி
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்