ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம்; அமைச்சர் நேரு சாதனை என பட்டியலிட்ட அண்ணாமலை
சென்னை: பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. இதுவே அமைச்சர் நேருவின் சாதனை என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: அரசுப் பணி வழங்க லஞ்சம் ரூ.888 கோடி, ஒப்பந்தங்கள் வழங்க லஞ்சம் ரூ.1,020 கோடி வரிசையில், மூன்றாவதாக, பணியிட மாற்றம் வழங்க லஞ்சம் வாங்கிய விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த லஞ்ச ஊழல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கோரி, மூன்றாவது அறிக்கை, தற்போது தமிழக போலீஸ் டிஜிபியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பல ஆயிரம் கோடி லஞ்சம் அனைத்தும், திமுக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சாதனைகள்.
அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள விரிவான அறிக்கையில், புகைப்படங்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள், டிஜிட்டல் சாதனங்களில் இருந்து மீட்கப்பட்ட ஆவணங்கள் என திமுக ஆட்சியில், அரசு அதிகாரிகளின் பணியிட மாற்றம் மற்றும் பதவி நியமனங்களுக்காக ரூ.365.87 கோடி லஞ்சம் வசூலிக்கப்பட்டதற்கான விரிவான ஆவணங்கள் அடங்கியுள்ளன. ஒரு பெரிய ஊழல் வலையமைப்பு இதில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பணி வழங்கவும், பணியிட மாற்றத்திற்கும், அரசு அதிகாரிகள் ரூ.7 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை லஞ்சம் கொடுக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கொடுப்பதற்கு தற்போது இரண்டு விளக்கங்களே உள்ளன. தனது தலைமையிலான ஆட்சியில் நடைபெறும் பூதாகரமான ஊழல்களை வேண்டுமென்றே கண்டுகொள்ளாமல் இருப்பது, அல்லது அவரும் இந்த ஊழல்களில் முழு உடந்தையாக இருப்பது. உறுதியான ஆதாரங்கள் கையில் இருந்தும், அமைச்சர் கே.என்.நேரு மீது எப்ஐஆர் பதிவு செய்ய தமிழக போலீசாருக்கு உத்தரவிடாமல் இருப்பது, திமுக ஆட்சியின் நிர்வாகம் எவ்வளவு சீரழிந்துள்ளது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
ஊழலை உரிமையாக்கிய ஒரு கட்சி என்றால் அது திமுக.
தினம் ஒரு ஊழல் லஞ்சம் குற்றச்சாட்டு சொல்லும் அண்ணாமலை இதுவரை ஒரு ஆதாரம் கூட கொடுத்ததில்லை! வெறும் வாய்ச் சவடால் மட்டும் தான்!
பார்வையற்றவருக்கு கண்தான் தெரியாது காது கூடவா கேட்காது கோபால் ? அதுபோக ஏற்கனவே மாட்டிக்கொண்டு முழிக்கிற பாலுவை போல நேருவும் மான நஷ்ட வழுக்கு தொடராலேமே .Any problem Mr Venu ?
அமலாக்கத்துறை கொடுத்த ஆதாரத்திற்கு பல முறை சொல்லியும் ஒரு வழக்கு பதிவாகியுள்ளன மேலும் எத்தனை ஆதாரம் வேண்டுமோ?
ஊழல் பற்றி அறிய நீயும் அரசாங்க சம்பந்தப்பட்ட ஃபைல் நகத்தி பார் அப்போ தெரியும்.
எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டார்கள். யாரும் சிறைக்கு செல்லமாட்டார்கள் என்று அண்ணாமலைக்கும் தெரியும் ஸ்டாலினுக்கும் தெரியும் மோடி அமிட்ஷாவுக்கும் நன்றாகவே தெரியும். ஆனால் மக்கள்தான் அப்பாவியா இருக்காங்க. அவங்களை சொல்லி குற்றம் இல்லை. என்ன மக்களும் ஓட்டுக்கு காசு வாங்க ஆரம்பிச்சுட்டாங்களே ஆட்சி மாறினாலும் மாறாவிட்டால் இவர்களை ஒன்றும் செய்யமுடியாது.வாய்தா வாங்கிட்டேயே காலம் கடத்தி சுகமா வாழ்ந்து முடிச்சிடுவான்கள். அப்பொறம் அவர்களின் தலைமுறை மக்களை சுரண்டும். போங்கப்பா உங்க வேற்று ஜனநாயகம்
ஏற்கனவே திமுக ஊழலுக்கு ஆதாரங்கள் என்று பொட்டி நிறைய ஆளுநரிடம் அண்ணாமலை கொடுத்தது என்ன ஆயிற்று
அரசாங்கத்தை மாற்றாமல் யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது
பேசிப் பயனில்லை. என்ன செயல் செய்தீர்கள்? முதல்வரைத் தூங்க விடாமல் அழுத்தம் கொடுத்து வழக்குப் பதிய வைத்து கைது செய்ய வேண்டும்.
பங்களிப்பு செய்யபடும் பிறகு அமைதியாகி விடும்
romba yogiyan.
இருக்குறதில் ஓரளவு ஒழுக்கமாக உள்ளார்
இவர் மேல் உள்ள ஊழல் பத்தி செய்தி போட ?
நீங்க யாரு ட்ராவிடிய பயலா
மீண்டும் வசந்தம் உன் வாழ்வில் வருமா??
இப்படி கொள்ளை அடித்த பணத்தை கொண்டு இந்த மங்குனி கும்பகோணத்தில் வாங்கி போட்ட இடங்களின் மதிப்பு உயர வேண்டும் என்று தேவை இல்லாமல் கும்பகோணம் பேருந்து நிலையத்தை அந்த இடத்திற்கு அருகில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் கொண்டு செல்கிறார்கள் என்று கும்பகோணத்தின் மக்கள் இப்போது திருட்டு மாடல் அரசுக்கு எதிராக போராடிக்கொண்டு இருக்கிறார்கள் என்று செய்தி தாள்களில் வந்தது.....
கடந்த 5 ஆண்டுகளாக இதை தான் திரும்ப திரும்ப சொல்லி வருகிறீர்கள் ஏன் கடந்த 11 ஆண்டுகள் உங்கள் கட்சி ஆட்சி தானே நடக்கிறது. ஏன் நடவடிக்கை இல்லை. இது வரை நீங்கள் கொடுத்த பைல்கள் எத்தனை வழக்கு தொடரப்பட்டது. விஜய் மீது சிபிஐ காட்டும் அக்கறை ஏன் 2ஜி மேல் முறையிட்டு வழக்கில் இல்லை .
என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் தண்டனை தர வேண்டியது நீதிமன்றம். அவர்கள் தூங்குகிறார்கள் அல்லது தூங்குவது போல் நடிக்கிறார்கள். இப்போது உச்ச நீதிமன்றத்தில் 3 திமுக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் மீது தண்டணையை நிறுத்தி வைத்துள்ளனர். அவர்கள் சாகும் வரை தண்டனை கிடையாது
சிபிஐ விசாரணை மாநில அரசு உத்தரவு இட்டால் மட்டும் தன அவர்கள் விசாரிக்க முடியும். விஜய் கேஸ் சிபிஐ விசாரிக்க ஸ்டாலின் உத்தரவு இட்டார் .
2 ஜி அப்பீலை தினசரி விசாரணை செய்ய சிபிஐ விண்ணப்பித்து 2 ஆண்டுகள் ஆகிவிட்டன.மேலும்
-
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
-
ஐநா அலுவலகத்தை இடித்த இஸ்ரேல்: சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என கண்டனம்
-
கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம் வெற்றி பெற வேண்டும்; பாஜ.
-
ஆபாச வீடியோவில் சிக்கிய டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட்
-
அர்பன் நக்சலைட்களின் நோக்கம் மாறி வருகிறது: பிரதமர் மோடி
-
ஜார்ஜியா துாதராக அமித் குமார் மிஸ்ரா நியமனம்: மத்திய அரசு