அர்பன் நக்சலைட்களின் நோக்கம் மாறி வருகிறது: பிரதமர் மோடி

1


புதுடில்லி: '' அர்பன் நக்சலைட்களின் செல்வாக்கு, சர்வதேச பரிமாணங்களை பெறுவதுடன், இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகின்றனர்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.




டில்லியில் பாஜ தலைவராக நிதின் நபின் பதவியேற்றுக் கொண்ட விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது: நம் முன் உள்ள பெரிய சவால் அர்பன் நக்சலிசம். இதன் நோக்கம் சர்வதேச அளவில் மாறி வருகிறது. மோடியைப் பற்றி நேர்மறையாக பேசுபவர்களை, எழுதுபவர்களை திட்டமிட்டு அவமானப் படுத்துகின்றனர். அவர்கள் வேட்டையாடப்பட்டு தீண்டத்தகாதவர்களாக ஆக்கப்படுகிறார்கள். அவர்கள் குரல் அமைதியாக்கப்படுவதுடன், மீண்டும் பேச அனுமதிக்கப்படவில்லை. இது தான் அர்பன் நக்சலிசத்தின் முறை. இது போன்ற குழுக்கள்பல ஆண்டுகளாக பாஜவை தனிமைப்படுத்தி, கட்சி உறுப்பினர்களை நாடு முழுவதும் தீண்டத்தகாதர்களாக நடத்தி வருகின்றனர்.

சவால்



தற்போது தேசம், அர்பன் நக்சல்களின் செயல்களை புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க அர்பன் நக்சல்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.நாம் ஒவ்வொரு சவாலையும் நமது முழு பலத்துடன் எதிர்கொள்ள வேண்டும்.


இன்று நாட்டின் முன் உள்ள மிக முக்கியமான சவால் ஊடுருவல்காரர்கள். உலகில் யாரும் தங்கள் நாட்டில் ஊடுருவல்காரர்களை ஏற்றுக் கொள்வதில்லை. மேலும் இந்தியாவும் ஊடுருவல்காரர்கள் அதன் ஏழைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை பறிக்க அனுமதிக்க முடியாது.

ஓட்டு வங்கி



ஊடுருபவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் அச்சுறுத்தலாக உள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் நாடுகளுக்கு திருப்பி அனுப்புவது மிகவும் முக்கியம்.
மேலும் ஓட்டு வங்கி அரசியலுக்காக ஊடுருவல்காரர்களை பாதுகாக்கும் கட்சிகளை மக்கள் முன் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Advertisement