ஐநா அலுவலகத்தை இடித்த இஸ்ரேல்: சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என கண்டனம்
ஜெருசலேம்: ஜெருசலேமில் உள்ள ஐநா பாலஸ்தீன அகதிகள் அமைப்பு வளாகத்தை புல்டோசரால் இஸ்ரேல் இடித்து தரைமட்டமாக்கியது. இது சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என அந்த அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
கிழக்கு ஜெருசலேமில் உள்ள ஐநாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான வளாகத்தை கட்டடங்களை இஸ்ரேல் புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டம் ஆக்கியது. அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றிய பிறகு புல்டோசர்கள் மூலம் அங்கிருந்த பல பெரிய மற்றும் சிறிய கட்டடங்களை இடித்ததாக ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமையின் செய்தித் தொடர்பாளர் ஜோனாதன் போவ்லர் தெரிவித்தார்.
காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி வழங்கும் குழுக்கள் மீது இஸ்ரேல் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வரும் நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது, சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என ஐக்கிய நாடுகளின் நிவாரண முகமை கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
2024ம் ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2025 தொடக்கத்தில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகமையின் செயல்பாடுகள் இஸ்ரேலில் தடை செய்யப்பட்டன. பாலஸ்தீனர்களுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை தாண்டியும் உதவிசெய்த 37 உதவி அமைப்புகளின் செயல்பாட்டு உரிமங்களை இஸ்ரேல் ரத்து செய்துள்ளது.
மேலும்
-
திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு