கறிக்கோழி வளர்ப்போர் போராட்டம் வெற்றி பெற வேண்டும்; பாஜ.
ஈரோடு : தமிழக பாஜ. விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் அறிக்கை:
கறிக்கோழி வளர்ப்போர் பண்ணையாளர்கள் வளர்ப்புத்தொகை உயர்வு கேட்டு, போராட்டம் நடத்தினர்.
அவர்களை வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுதலை செய்யக்கோரியும்,தமிழக அரசிற்கு கண்டனம் தெரிவித்தும், ஈரோடு மாவட்டம் விண்ணம்பள்ளி, கிட்டாம்பாளையம், அவினாசிபாளையம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்துகொண்டு கைதுசெய்யப்பட்ட விவசாயிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசுக்கு வைத்தேன்.
மேலும் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறையை கையில் எடுக்கக்கூடாது.விவசாயிகள் கோழி வளர்க்க பண்ணையாளர்களோடு ஒப்பந்தம் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர்களும்,நம்மைப்போன்று விவசாயிகளாக இருந்து முன்னேறியவர்களே.
இவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அல்ல.மேலும் அசைவ உணவான கோழி புரதச்சத்து மிக்க முக்கிய உணவாகி விட்டதால் அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா,ஆந்திரா மாநிலங்களிலிருந்து பல நிறுவனங்கள் தமிழகத்திற்கு கறிக்கோழி 'அனுப்ப தயாராக உள்ள நிலையில்,வளர்ப்புத்தொகை உயர்வு பேச்சுவார்த்தையில் ஈடுபடும் பண்ணையாளர்கள் எக்காரணம் கொண்டும் கோழி உற்பத்தி குறையும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற எனது கருத்தை முன்வைத்தேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
-
3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை
-
இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை
-
தமிழகத்தில் தனிப்பெரும்பான்மையுடன் தேஜ கூட்டணி ஆட்சி: நயினார் நாகேந்திரன் உறுதி
-
ஐநா அலுவலகத்தை இடித்த இஸ்ரேல்: சர்வதேச சட்டத்தை மீறும் செயல் என கண்டனம்
-
ஆபாச வீடியோவில் சிக்கிய டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட்